'பாப்கார்ன்' விற்பனையை கைவிடும் பி.வி.ஆர்., 4700 - பி.சி., பிராண்டை விற்க ஒப்பந்தம்
'பாப்கார்ன்' விற்பனையை கைவிடும் பி.வி.ஆர்., 4700 - பி.சி., பிராண்டை விற்க ஒப்பந்தம்
ADDED : ஜன 27, 2026 01:23 AM

புதுடில்லி: மல்டிபிளெக்ஸ் நிறுவனமான 'பி.வி.ஆர்., ஐநாக்ஸ்' '4700 - பி.சி.,' என்ற பிராண்டில், தன் 'பாப்கார்ன்' வணிகத்தை எப்.எம்.சி.ஜி., நிறுவனமான மேரிகோவுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து பங்கு சந்தையில் பி.வி.ஆர்., ஐநாக்ஸ் தாக்கல் செய்து உள்ள அறிக்கை:
4700 - பி.சி., பிராண்டில் பாப்கார்ன் விற்பனை செய்து வரும், எங்கள் நிறுவனத்தின் துணை நிறுவனமான இஸட்.எம்.பி.எல்.,லின் 93.27 சதவீத பங்குகளை, 226.80 கோடி ரூபாய்க்கு மேரிகோ நிறுவனத்திடம் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. முழு பணப் பரிவர்த்தனை மூலம் இந்த விற்பனை நடைபெறும்.
பி.பி.ஆர்., ஐநாக்ஸின் மைய வணிகமான மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் தொடர்பான நடவடிக்கை களில் அதிக கவனம் செலுத்துவதற்காகவும், நிறுவனத்தின் கடன் சுமையை குறைப்பதற்காகவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உற்பத்தி - உற்பத்தி திறன்: மாதத்திற்கு 35 -- 40 டன்கள் பாப்கார்ன் தயாரிப்பு. ஹரியானாவில் பெரிய உற்பத்தி வசதி உள்ளது. - கடைகள்: 22 கடைகளை இயக்குகிறது - விரிவாக்கம்: ஜெனரல் டிரேட், மாடர்ன் ரீடெய்ல், புதிய சந்தைகளில் விரிவாக்கம் செய்ய திட்டம். மேரிகோவின் அனுபவத்தால் வினியோகம், பொருட்கள் விரிவடையும் என எதிர்பார்ப்பு

