தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/Q&A ‘தேவைக்கேற்ற சோலார் திறனை தேர்வு செய்ய வேண்டும்’

Q&A ‘தேவைக்கேற்ற சோலார் திறனை தேர்வு செய்ய வேண்டும்’

Q&A ‘தேவைக்கேற்ற சோலார் திறனை தேர்வு செய்ய வேண்டும்’


UPDATED : அக் 10, 2026 06:09 PM

ADDED : அக் 10, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 06:09 PM ADDED : அக் 10, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேள்வி:



ஒரு சிறு தொழில் நிறுவனம் மின்சார செலவை குறைக்கவும், தேவைக்கு அதிகமாக முதலீடு செய்யாமல் இருக்கவும், சோலார் திட்டத்தின் சரியான அளவை எப்படி தீர்மானிக்க வேண்டும்?

பதில்:



சிறு தொழில் நிறுவனத்தின் தற்போதைய மின்சார பயன்பாட்டை, மாதந்தோறும் பயன்படுத்தும் மின் யூனிட்கள், பகல் நேர அதிகபட்ச மின் தேவை, இடவசதி ஆகியவற்றின் அடிப்படையில் முதலில் கணக்கிட வேண்டும். அன்மையில் செலுத்தப்பட்ட மின் கட்டணங்கள், நிறுவனத்தின் செயல்படும் நேரம், எதிர்கால மின் தேவை ஆகியவற்றையும் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, தினசரி பயன்பாட்டை ஈடுசெய்யும் வகையில் தேவையான கிலோவாட் அல்லது மெகாவாட் திறன் கொண்ட சோலார் அமைப்பை தேர்வு செய்வது சிறந்தது. தேவையை விட அதிக திறன் கொண்ட அமைப்பை நிறுவினால், கூடுதல் மின்சாரம் முழுமையாக பயன் தராமல் போகலாம். சரியான அளவில் திட்டமிட்டால் மின் செலவை குறைக்கவும், தேவையற்ற ஆரம்ப முதலீட்டை தவிர்க்கவும், முதலீட்டு செலவை விரைவாக மீட்டெடுக்கவும் முடியும்.

நிஷாந்த்

நிர்வாக இயக்குனர், கேண்டி சோலார் இந்தியா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us