தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/1.90% தொழிற்சாலைகளில் மட்டுமே ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவுகள்

1.90% தொழிற்சாலைகளில் மட்டுமே ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவுகள்

1.90% தொழிற்சாலைகளில் மட்டுமே ஆராய்ச்சி, மேம்பாட்டு பிரிவுகள்


UPDATED : நவ 30, 2026 12:00 AM

ADDED : நவ 29, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2026 12:00 AM ADDED : நவ 29, 2026 10:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: நாட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் வெறும் 1.90 சதவீதத்தில் மட்டுமே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுகள் உள்ளன.

இப்பிரிவுகளில் தொழிற்சாலைகளின் மொத்த பணியாளர்களில் 0.30 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர் என, 2024 -– 25ம் நிதியாண்டுக்கான தொழில் துறை கணக்கெடுப்பு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் தொழிற்சாலைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள், குறிப்பிட்ட சில துறைகளில் மட்டுமே அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

மொத்தம் உள்ள 28 முக்கிய தொழில் துறை பிரிவுகளில், மருந்து தயாரிப்பு துறையில் மட்டும் 35.60 சதவீத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியாளர்கள் உள்ளனர்.

அடுத்தடுத்த இடங்களில் ரசாயனம், இயந்திர உற்பத்தி மற்றும் மோட்டார் வாகன துறைகள் உள்ளன. இந்த நான்கு துறைகளும் இணைந்து, தொழிற்சாலைகளில் பணியாற்றும் மொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு அளவை கொண்டு உள்ளன.

மேலும், தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்குவதிலும் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2024 –- 25ம் நிதியாண்டில், நாட்டில் செயல்பாட்டில் இருந்த 2.19 லட்சம் தொழிற்சாலைகளில், வெறும் 2.70 சதவீதம் மட்டுமே தங்களது பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கியுள்ளன. அதாவது, 5,816 தொழிற்சாலைகள் மட்டுமே இத்தகைய பயிற்சிகளை அளித்துள்ளன என, ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us