தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ மூலப்பொருட்கள் தட்டுப்பாடு 'பாலிபேக்' விலை 20% உயர்வு

 மூலப்பொருட்கள் தட்டுப்பாடு 'பாலிபேக்' விலை 20% உயர்வு

 மூலப்பொருட்கள் தட்டுப்பாடு 'பாலிபேக்' விலை 20% உயர்வு


ADDED : மார் 06, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 01:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், திருப்பூர் 'பாலிபேக்' நிறுவனங்கள் தவிக்கின்றன; செலவினங்களை சமாளிக்க, பாலிபேக் விலை, 20 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தைகளுக்கான பின்னலாடைகள், பாதுகாப்பாக நுகர்வோருக்கு கிடைக்க செய்யும் வகையில், 'பாலிபேக்'கில் பேக்கிங் செய்யப்படுகின்றன. பின்னலாடை துறையின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், திருப்பூரில் பாலிபேக் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் 200 நிறுவனங்கள் இயங்குகின்றன.

பெட்ரோலிய பொருளான நாப்தாவிலிருந்து தயாரிக்கப்படும், பாலி புரொப்லின், பாலி எத்திலீன் ஆகியவை, பாலிபேக் உற்பத்திக்கு பிரதான மூலப்பொருட்கள் ஆகும். இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து பிளாஸ்டிக் உற்பத்தி மூலப்பொருட்கள் வரத்து குறைந்துள்ளது.

இவற்றின் தட்டுப்பாடு காரணமாக விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது, திருப்பூர் பகுதி பாலிபேக் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பாலிபேக் தயாரிப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்க தலைவர் செல்வராஜ் கூறுகையில், “மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலையை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

''கூடுதல் விலை கொடுத்தாலும், மூலப்பொருள் கிடைப்பது சிக்கலாகியுள்ளது. இக்கட்டான இந்த சூழலை எதிர்கொள்ளும் வகையில், பாலிபேக் விலை நடைமுறையிலிருந்து, 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us