தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ உலகின் முதல் ஏ.ஐ., ஏஜென்ட் ஸ்டூடியோ அமைத்தது 'ரேசர்பே'

உலகின் முதல் ஏ.ஐ., ஏஜென்ட் ஸ்டூடியோ அமைத்தது 'ரேசர்பே'

உலகின் முதல் ஏ.ஐ., ஏஜென்ட் ஸ்டூடியோ அமைத்தது 'ரேசர்பே'


ADDED : மார் 13, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான ரேசர்பே, உலகின் முதல் ஏ.ஐ., ஏஜென்ட் ஸ்டூடியோவை அறிமுகம் செய்துள்ளது. இது ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் கிளாட் ஏஜென்ட் எஸ்.டி.கே., தொழில்நுட்பத்தில் இயங்கும்.

இனி நிறுவனங்கள் தங்களுக்கென பிரத்யேகமான, செயற்கை நுண்ணறிவு உதவியாளர்களை உருவாக்கி கொள்ளலாம்.

இதன் வாயிலாக பணப்பரிவர்த்தனைகள், தவறிய சந்தா வசூல், சர்ச்சைகளுக்கு தீர்வு, பணப்புழக்கம் கணிப்பு, கைவிடப்பட்ட வணிகம் மீட்பு, வணிக கணிப்பு போன்ற பணிகளை விரைவாக செய்யலாம் என, ரேசர்பே தலைமை செயல் அதிகாரி ஹர்ஷில் மாத்துர் கூறியுள்ளார்.

@subtitle@ஜப்பான் வங்கி குழுமத்துடன் எஸ்.பி.ஐ., ஒப்பந்தம்


புதுடில்லி:ஜப்பான் வங்கி குழுமமான, எம்.யு.எப்.ஜி., பைனான்சியலுடன் இணைந்து செயல்பட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, இரண்டு வங்கிகளும் இணைந்து இருநாடுகளின் நிறுவனங்களுக்கு நிதி வழங்கும். மேலும் பெரிய திட்டங்கள், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிறுவனங்களை இணைத்தல் போன்ற வர்த்தக செயல்பாடுகளுக்கும் நிதி உதவியை விரைவாக வழங்கும்.

இதன் வாயிலாக, ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் விரைவாக தொழில் துவங்கவும், இந்திய நிறுவனங்கள் உலக அளவில் கிளை பரப்பவும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். ஜப்பானிய முதலீடுகளும், இந்தியாவின் வங்கி பலமும் இணைவதால், இந்திய தொழில்துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us