ஏ.டி.எம்., சேவை கட்டணத்தை அதிகரிக்க ஆர்.பி.ஐ., அனுமதி
ஏ.டி.எம்., சேவை கட்டணத்தை அதிகரிக்க ஆர்.பி.ஐ., அனுமதி
ADDED : மார் 25, 2025 07:20 AM

மும்பை; ஏ.டி.எம்.,களில் வங்கிகள் இடையேயான பரிவர்த்தனை கட்டணத்தை, அதிகரித்துக் கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ஒரு வங்கியின் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.,மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் 17 ரூபாயில் இருந்து, இரண்டு ரூபாய் அதிகரிக்கப்பட்டு 19 ரூபாயாக நிர்ணயிக்க, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல் அளித்திருக்கிறது.
ரொக்கம் அல்லாத ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளான பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு, 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 6 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக கட்டணம் உயரும்.
எனினும், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்., சேவைக்கும், மற்ற வங்கி ஏ.டி.எம்., பயன்படுத்துவதில் மெட்ரோ நகரங்களில் ஐந்து முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் மூன்று முறையும் கட்டணம் வசூலிக்கப்படாது.
இலவச அனுமதிக்கு மேல் பயன்படுத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் இடையேயான கட்டணமும், கட்டண உயர்வும் பொருந்தும்.