ADDED : செப் 16, 2026 04:41 AM

மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்கு சந்தையில் பட்டியலிடுவது தொடர்பாக தாக்கல் செய்யப்படும் எந்தவொரு வழக்கிலும், தமது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி'கேவியட்' மனு தாக்கல் செய்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனமாக ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது. அதை ரத்து செய்யக்கோரி டாடா சன்ஸ் விண்ணப்பித்திருந்தது. இதை ஆர்.பி.ஐ., நிராகரித்துள்ளது. இதனால், டாடா சன்ஸ் நிறுவனம் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆர்.பி.ஐ., முடிவை டாடா சன்ஸ் நிறுவனம் எதிர்த்து வழக்கு தொடர்ந்தாலோ அல்லது அந்த முடிவுக்கு இடைக்கால தடை கோரினாலோ, ஆர்.பி.ஐ.,யின் தரப்பு கருத்தை நீதிமன்றம் கேட்பதை உறுதி செய்யும் வகையில் இந்த 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
