sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 சவுதி அரேபியா, யு.ஏ.இ.,க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு

/

 சவுதி அரேபியா, யு.ஏ.இ.,க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு

 சவுதி அரேபியா, யு.ஏ.இ.,க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு

 சவுதி அரேபியா, யு.ஏ.இ.,க்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு


UPDATED : பிப் 19, 2026 01:46 AM

ADDED : பிப் 19, 2026 01:31 AM

Google News

UPDATED : பிப் 19, 2026 01:46 AM ADDED : பிப் 19, 2026 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: இந்திய ஆயத்த ஆடை வர்த்தகத்தில், அரபு நாடுக ளுக்கான ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் எதிர்பாராத வகையில் அதிகரித்து உள்ளது.

அமெரிக்க சந்தையில் திடீர் சவால்கள் ஏற்பட்ட நிலையிலும், மற்ற நாடுகளுடனான வர்த்தகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்து அதிக அளவு ஆடை ஏற்று மதி நடக்கும், 'டாப் 10' நாடுகள் பட்டியலில், அரபு நாடுகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி அமெரிக்காவுக்கு, 13 சதவீதமும், நெதர்லாந்துக்கு 27 சதவீதமும், ஸ்பெயினுக்கு 14 சதவீதமும், ஐக்கிய அரபு எமி ரேட்ஸுக்கு 6.20 சதவீதமும் அதிகரித்திருந்தது.

நடப்பு நிதியாண்டில், துவக்கத்தில் இருந்தே, அரபு நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. 'டாப் 10' நாடுகளுக்கான, ஒன்பது மாத ஆடை ஏற்றுமதி, 76,324 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது; இது, முந்தைய ஆண்டில், 71,641 கோடி ரூபாயாக இருந்தது.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கத்தைவிட, அரபு நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

Image 1537905


கடந்த ஏப்., முதல் டிச., வரை, சவுதி அரேபியாவுக்கான ஆடை ஏற்றுமதி, 18.50 சதவீதம் அதிகரித்துள்ளது; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்துள்ளது; ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதியும், 8 முதல், 15 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us