sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

2020 - 21ம் நிதியாண்டுக்கான 'ரீபண்டு' ஏப்., 30க்குள் கிடைக்கும்

/

2020 - 21ம் நிதியாண்டுக்கான 'ரீபண்டு' ஏப்., 30க்குள் கிடைக்கும்

2020 - 21ம் நிதியாண்டுக்கான 'ரீபண்டு' ஏப்., 30க்குள் கிடைக்கும்

2020 - 21ம் நிதியாண்டுக்கான 'ரீபண்டு' ஏப்., 30க்குள் கிடைக்கும்


ADDED : மார் 08, 2024 01:44 AM

Google News

ADDED : மார் 08, 2024 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த 2020 - 21ம் நிதியாண்டுக்கான நிலுவையிலுள்ள வருமான வரி 'ரீபண்டு'கள், வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, வருமான வரித்துறையிடமிருந்து ஏதேனும் தகவல் வந்திருக்கிறதா என்பதை பற்றி அறிய, வரி செலுத்துவோர் தங்கள் மின்னஞ்சல்களை தொடர்ந்து சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட சில பிரச்னைகள் காரணமாக, 2020 - 21ம் நிதியாண்டில் முறைப்படி தாக்கல் செய்யப்பட்ட சிலரது வருமான வரி கணக்குகளுக்கு இன்னும் ரீபண்டுகள் வழங்கப்படவில்லை.

இதில், வரி செலுத்துவோர் மீது எந்த தவறும் இல்லை என்ற போதிலும், முறைப்படி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரீபண்டுகள் வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்டவை காரணமாக, 2020 - 21ம் நிதியாண்டில் முறைப்படி தாக்கல் செய்யப்பட்ட சிலரது வருமான வரி கணக்குகளுக்கு, இன்னும் ரீபண்டுகள் வழங்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us