ADDED : ஜன 21, 2026 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: தமிழகத்தில் கருப்பு திராட்சை அடிப்படையிலான புதிய கேம்பா பர்பிள் எனர்ஜி எனும் குளிர்பானத்தை ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் அறிமுகப்படுத்தி உள்ளது.
ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் தெரிவித்துள்ளதாவது:
கருப்பு திராட்சை பானங்கள் மீதான தமிழக இளைஞர்களின் விருப்பத்தை கொண்டாடும் வகையில், கேம்பா பர்பிள் எனர்ஜியை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் சிறப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவால் உருவாக்கப்பட்ட இந்த பானம், தமிழக மக்கள் மத்தியில் விருப்பமான பானமாக மாறும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
குறிப்பாக, விளையாட்டு ஆர்வலர்கள், இளைஞர்களுக்கு மலிவு விலையில், உலக தரத்திலான இந்த பானம், மீண்டும் ஆற்றலை அளிக்கும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

