தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ராணுவ கொள்முதலுக்கு 20% கூடுதல் நிதி கோரிக்கை

ராணுவ கொள்முதலுக்கு 20% கூடுதல் நிதி கோரிக்கை

ராணுவ கொள்முதலுக்கு 20% கூடுதல் நிதி கோரிக்கை


UPDATED : நவ 23, 2026 05:10 PM

ADDED : நவ 23, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 05:10 PM ADDED : நவ 23, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிய ஆயுதங்கள் மற்றும் ராணுவ கருவிகள் வாங்குவதற்கான நிதியை, வரும் 2027–28 நிதியாண்டில் 20 சதவீதம் அதிகரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடில்லியில் நடந்த இந்திய தொழில், வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான 'பிக்கி' நிகழ்ச்சியில், பாதுகாப்புத்துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் இதை தெரிவித்தார்.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு தேவையான நவீன ஆயுதங்கள், விமானங்கள் மற்றும் கருவிகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் ராணுவ கொள்முதலுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டிலும் கூடுதல் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக, ராணுவ கொள்முதல் பணிகளை விரைவுபடுத்தவும், உள்நாட்டில் ஆயுதங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை, சுமார் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த நிதியாண்டில், இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ரூ.50,000 கோடி இலக்கு


நாட்டில் தயாரிக்கப்படும் பீரங்கிகள், ஏவுகணைகள், குண்டு துளைக்காத பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்கள், தற்போது சுமார் 80 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. வரும் ஆண்டுகளில் பெரிய ராணுவ கருவிகளின் ஏற்றுமதியும் அதிகரிக்கும். ஆண்டுக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாட ஏற்றுமதி இலக்கை, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஓராண்டு முன்னதாகவே, 2028–29 நிதியாண்டில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
- ராஜேஷ் குமார் சிங்,
பாதுகாப்புத்துறை செயலர்



ராணுவ தளவாடங்களுக்கு நிதி ஒதுக்கீடு

நிதியாண்டு : ஒதுக்கீடு

2023–24 : 1.63

2024–25 : 1.72

2025–26 : 1.80

2026–27 : 2.19

மதிப்பு: ரூ. லட்சம் கோடிகளில்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us