ADDED : பிப் 14, 2026 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த கே.எல்.ஏ., கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான கே.எல்.ஏ., இந்தியா நிறுவனம், 3,510 கோடி ரூபாய் முதலீட்டில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நேற்று இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
கே.எல்.ஏ., இந்தியா நிறுவனம், சென்னையில், 12 ஏக்கர் வளாகத்தில் உயர் செயல்திறன், கணினி தொழில்நுட்பம், செயல்முறை கட்டுப்பாடு, பொறியியல் மென்பொருள் போன்ற துறைகளில் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதன் வாயிலாக, அடுத்த 10 ஆண்டுகளில், 4,000 உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

