'கட்டுமான திட்டங்களுக்கான கடன் கொள்கை மறுசீராய்வு'
'கட்டுமான திட்டங்களுக்கான கடன் கொள்கை மறுசீராய்வு'
ADDED : டிச 21, 2025 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: புதிய குடியிருப்புகள் கட்டுமான திட்டங்களுக்கான கடன் கொள்கையை மறுசீராய்வு செய்ய இருப்பதாக எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் சி.எஸ்.செட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் துறையில் அதிகப்படியான கடன் வாங்கி, பலர் நஷ்டமடைந்துள்ளனர். எனவே, கடன் கொள்கை மறுசீராய்வில் மிகவும் கவனமாகச் செயல்பட இருக்கிறோம்.
நிலையான வெளிப்படைத்தன்மை, திட்ட மேலாண்மை மற்றும் ஆபத்து மேலாண்மை ஆகியவை எங்களை போன்ற வங்கிகளுக்கு நம்பிக்கையை தரும். வாடிக்கையாளர்களும், குறைந்த வட்டியில், கட்டுமான திட்டங்களுக்கு கடனை பெற முடியும்.
கட்டுமான நிறுவனங்கள், குறைந்தபட்சம் 40 - 50 சதவீதம் அளவுக்கு வாடகைதாரர்கள் வருவதை உறுதி செய்தால், அலுவலக கட்டுமானங்களுக்கு கடன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

