தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/சிறுதொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி வளர்ச்சி நிதி

சிறுதொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி வளர்ச்சி நிதி

சிறுதொழில் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி வளர்ச்சி நிதி


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 02:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 02:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுதொழில் நிறுவனங்களுக்கு 10,000 கோடி ரூபாய் வளர்ச்சி நிதி அமைக்கும் திட்டத்தை மத்திய அமைச்சரவை பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் வளர்ச்சி வாய்ப்பு உள்ள சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த தேவையான முதலீட்டு ஆதரவை பெறும் நோக்கில் இந்த நிதி அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

இந்த நிதி அமைக்கும் திட்டத்தை, 2026–27 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். வளர்ச்சி வாய்ப்பு உள்ள சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டு ஆதரவை வழங்கி, அவற்றின் தொழில் வளர்ச்சிக்கு உதவுவதே இதன் நோக்கம் ஆகும்.

வங்கி கடனை மட்டும் சார்ந்திருக்காமல், தொழில் வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் நிதியை பெற இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் வளர்ச்சி திறன் கொண்ட நிறுவனங்கள் இதன் கீழ் தேர்வு செய்யப்பட உள்ளன.

இதனுடன், ஏற்கனவே செயல்பட்டு வரும் தற்சார்பு இந்தியா நிதிக்கு கூடுதலாக 2,000 கோடி ரூபாய் வழங்கவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரம்பரிய தொழில்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அதிகம் செயல்படும் 200 பழைய பகுதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு பணம் விரைவாக கிடைக்க செய்யும் ‘டிரெட்ஸ்’ தளத்தின் வாயிலாக, இதுவரை 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களிடம் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணப்பட்டுவாடாவை ‘டிரெட்ஸ்’ தளம் வாயிலாக மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் சிறு நிறுவனங்களுக்கு நிலுவை தொகை விரைவாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

மேலும், சிறு நிறுவனங்களுக்கு கணக்கு பராமரிப்பு, சட்ட விதிமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பணிகளில் குறைந்த செலவில் உதவ, ‘கார்ப்பரேட் மித்ரா’ என்ற பெயரில் நிபுணர்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எஸ்.எம்.இ., வளர்ச்சி நிதிக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த பிறகு, எந்த நிறுவனங்கள் தகுதி பெறும், எவ்வளவு நிதி கிடைக்கும், அதை பெறுவதற்கான நடைமுறை என்ன என்பது குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிதி திட்டம் நடைமுறைக்கு வந்தால், விரிவாக்கத்துக்கு தேவையான மூலதனம் பெறுவதில் சிரமம் எதிர்கொள்ளும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு மாற்று நிதி வாய்ப்பு கிடைக்கும் என தொழில் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us