ADDED : டிச 22, 2025 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்திய உயிரி எரிபொருள் துறை, அடுத்த நிதியாண்டில் 5,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கும் என, இந்திய பயோ காஸ் சங்கம் தெரிவித்து உள்ளது.
மேலும் அச்சங்கம் தெரிவித்துள்ளதாவது:
ஜி.எஸ்.டி., குறைப்பால், சி.பி.ஜி., எனும் அழுத்தப்பட்ட பயோ காஸ் துறையின் வர்த்தகச் சூழலை எளிதாக்கி உள்ளது.
மேலும், இத்துறைக்கான ஜி.எஸ்.டி.,யை 7 சதவீதம் குறைத்ததை அடுத்து, பயோ காஸ் நிறுவனங்களின் லாபம் அதிகரித்துள்ளது. குறுகிய காலம் துவங்கி, நடுத்தர காலத்துக்குள், கிட்டத்தட்ட 45 சதவீதம் அளவுக்கு முதலீடு அதிகரிக்கும்.
அடுத்தாண்டு அழுத்தப்பட்ட பயோ காஸ் துறையின் மதிப்பு 36,000 கோடி ரூபாயாக உயரும் என மதிப்பிடப்படுகிறது. இது, 2030ல் 45,000 கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

