தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ரூ.110 கோடி நிதி திரட்டியது ‘ஆனந்தாஸ்’ நிறுவனம்

ரூ.110 கோடி நிதி திரட்டியது ‘ஆனந்தாஸ்’ நிறுவனம்

ரூ.110 கோடி நிதி திரட்டியது ‘ஆனந்தாஸ்’ நிறுவனம்


UPDATED : நவ 19, 2026 12:00 AM

ADDED : நவ 18, 2026 11:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 12:00 AM ADDED : நவ 18, 2026 11:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: இனிப்புகள் மற்றும் தின்பண் டங்கள் தயாரிப்பு நிறுவனமான ஆனந்தாஸ், புதிய முதலீட்டாளரான ஆர்யா வென்ச்சர்ஸ் உட்பட பல நிறுவனங்கள் வாயிலாக 110 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1,900 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கோவையை சேர்ந்த ஆனந்தாஸ், ஏ91 பார்ட்னர்ஸ், வாட்டர்பீல்டு அட்வைசர்ஸ் உள்ளிட்ட, ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்கள் மற்றும் ஆர்யா வென்ச்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து புதிய முதலீட்டை திரட்டியுள்ளது. இதில் ஆர்யா வென்ச்சர்ஸ் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாயும், வாட்டர்பீல்டு அட்வைசர்ஸ், ஏ91 பார்ட்னர்ஸ் ஆகியவை முறையே 15 மற்றும் 10 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. ஐ–தாட் பைனான்சியல் கன்சல்டிங் நிறுவனம் 10 கோடி ரூபாயும் அதன் இணை நிறு வனர்கள் 7.20 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளனர்.

இந்த 110 கோடி ரூபாயை ஆனந்தாஸ் நிறுவனம் தனது விரிவாக்கம் மற்றும் முதலீட்டு செலவு, செயல்பாட்டு மூலதன தேவைகளுக்கு பயன்படுத்த உள்ளது. கடந்த 1998ம் ஆண்டு உணவக வணிகத்தை இந்நிறுவனம் தொடங்கிய நிலையில், இனிப்புகள், தின்பண்டங்கள் சில்லரை வணிகத் தில் 2017 ல் நுழைந்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆனந்தாஸ் கடைகள் இயங்கி வருகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us