ADDED : மார் 31, 2026 03:00 AM

மும்பை: கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பு நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9.88 சதவீதம் என்ற அளவில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்துக்கு இடையே, ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல்முறையாக 95ஐ கடந்து 95.22 வரை சென்றது. எனினும், வர்த்தக முடிவில் ஓரளவுக்கு மீண்டு 94.70 ஆக நிலைபெற்றது. ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்தவும், தேவையற்ற ஊக வணிகத்தை கட்டுப்படுத்தவும், ரிசர்வ் வங்கி வங்கிகளின் இருப்பு வரம்பை குறைத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதே நேரத்தில், நாட்டின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதாகவும், பிற நாடுகளின் நாணயங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் நிலை சீராகவே உள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரும் நிதியாண்டில் ரூபாயின் மதிப்பு 92 முதல் 97 என்ற அளவிலேயே வர்த்தகமாகும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
முக்கிய காரணங்கள்
* அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி
* மேற்காசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம்
* சர்வதேச சந்தையில் தொடர்ந்து உயரும் கச்சா எண்ணெய் விலை
* இந்திய பங்கு சந்தைகளில் இருந்து பெருமளவில் வெளியேறும் அன்னிய முதலீடுகள்.
