ADDED : ஆக 14, 2025 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ.எம்.பி.எஸ்., கட்டணம் உயர்த்தியது எஸ்.பி.ஐ.,
ஐ .எம்.பி.எஸ்., பரிவர்த்தனை கட்டணத்தை, பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., மாற்றி அமைத்து உள்ளது. இதன்படி, புதிய பரிவர்த்தனை கட்டணமானது, வாடிக்கையாளர்களுக்கு நாளை முதலும், நிறுவனங்களுக்கு வரும் செப்., 8ம் தேதி முதலும் அமலுக்கு வருகிறது.
இ - பேங்கிங் மற்றும் யோனோ செயலி வாயிலாக வாடிக்கையாளர்கள், 25,000 ரூபாய் வரை ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனை மேற்கொள்ள கட்டணம் செலுத்த தேவையில்லை.
அதற்கும் மேற்பட்ட மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் பொருந்தும்.
*25,000 ரூபாய் வரையிலான ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை *வாடிக்கையாளர்களுக்கு நாளை முதலும், நிறுவனங்களுக்கு வரும் செப்.,8 முதலும் அமலுக்கு வருகிறது