ADDED : மார் 26, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் முக்கிய நகரங்களில் அலுவலக பகிர்வு சேவையை அளித்து வரும் 'வீவொர்க் இந்தியா' நிறுவனத்தின் ஐ.பி.ஓ.,வுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை, 'செபி' நிறுத்தி வைத்துள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள 'எம்பஸி' குழுமத்துக்கு சொந்தமான வீவொர்க் இந்தியா, பெங்களூரு உட்பட 8 நகரங்களில், 65க்கும் மேற்பட்ட அலுவலகங்களை நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகிறது. இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கோரி, கடந்த ஜன., 31ம் தேதி விண்ணப்பித்து இருந்தது.
அதில், ஏற்கனவே முதலீட்டாளர் வசமுள்ள 4.37 கோடி பங்குகளை, ஐ.பி.ஓ., வாயிலாக விற்க இருப்பதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில், எந்தவொரு காரணத்தையும் குறிப்பிடாமல், வீவொர்க் இந்தியா ஐ.பி.ஓ.,வை நிறுத்தி வைத்துள்ளதாக செபி தன் இணையதளத்தில் தெரிவித்துள்ளது.