இரண்டாவது விமான நிலையம் சென்னைக்கு அவசியம்: சி.ஐ.ஐ.,
இரண்டாவது விமான நிலையம் சென்னைக்கு அவசியம்: சி.ஐ.ஐ.,
ADDED : ஜூன் 03, 2026 02:09 AM

சென்னை: ''நாட்டில் பொருளாதார ரீதியாக வலுவான மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது; இந்த சூழலில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம்,'' என, சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழக அரசின் பட்ஜெட்டிற்கு ஆலோசனை வழங்க சி.ஐ.ஐ., தயாராக உள்ளது.
தமிழகத்தை உலகளாவிய பிராண்டாக வலுப்படுத்துதல், 2032க்குள் முன்னணி திறமையாளர்களின் மையமாக உருவாக்குதல், இரண்டாம் கட்ட நகரங்களை வேலைவாய்ப்பு மையங்களாக மாற்றுதல், மின் துறையின் செயல் திறனை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய பரிந்துரைகளில் அடங்கும்.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம். ஆந்திராவை போல், தமிழகத்திலும் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண செலவை குறைக்கவும், தொழில் துவங்க எளிய சூழல் இருக்க வேண்டும் எனவும், முதல்வர் விஜயிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
