ADDED : அக் 13, 2025 11:05 PM

ஹைதராபாத், நாட்டிலேயே முதல்முறையாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் செமிகண்டக்டர் கண்டு பிடிப்பு அருங்காட்சியகம் துவங்கப்பட்டுள்ளது. டி - சிப் என்ற நிறுவனம் இதை துவங்கியுள்ளது.
“சிப் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும்.
“தொழில்நுட்பம் சார்ந்த அருங்காட்சியகங்கள் தைவான் மற்றும் தென் கொரியாவில் இருந்தாலும், செமிகண்டக்டர் துறைக்கான பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை,” என, டி - சிப் தலைவர் சந்தீப் குமார் மக்தலா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'இந்த அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும். பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என அனைவரும் வந்து பார்வையிடலாம ் ' என்றார்.