உள்ளடக்கத்திற்கு செல்ல

சேவை துறை வளர்ச்சி குறியீடு சரிவு; ஹெச்.எஸ்.பி.சி., ஆய்வில் தகவல்
சேவை துறை வளர்ச்சி குறியீடு சரிவு; ஹெச்.எஸ்.பி.சி., ஆய்வில் தகவல்
ADDED : ஜூலை 04, 2026 07:16 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: நாட்டின் சேவை துறையின் வளர்ச்சி, கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் குறைந்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., நிறுவனம் வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை கூறுவதாவது:
சேவை துறையின் பி.எம்.ஐ., வணிக செயல்பாட்டு குறியீடு, மே மாதத்தில் 59.80 ஆக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 57.40 ஆக குறைந்துள்ளது. இது, 2025 ஜனவரிக்கு பின் பதிவான மிக குறைந்த வளர்ச்சி. உள்நாட்டு சந்தையில் தேவை குறைந்ததும், புதிய ஆர்டர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மந்தமடைந்ததும் இதற்கு முக்கிய காரணம்.
அதேநேரத்தில், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏற்றுமதி ஆர்டர்கள் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.
