ADDED : மார் 29, 2025 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, தொடர்ந்து இரண்டாவது மாதமாக கடந்த பிப்ரவரியிலும் சரிந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த துறையின் ஏற்றுமதி, கடந்த ஜனவரி மாதத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 2.72 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
மாதாந்திர அடிப்படையில் கணக்கிடும்போது இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்தாண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு பிப்ரவரியில் சேவைகள் துறை ஏற்றுமதி 11.60 சதவீதம் அதிகரித்துள்ளது.