தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சேவைகள் துறை வளர்ச்சி 11 மாதத்தில் இல்லாத உயர்வு

சேவைகள் துறை வளர்ச்சி 11 மாதத்தில் இல்லாத உயர்வு

சேவைகள் துறை வளர்ச்சி 11 மாதத்தில் இல்லாத உயர்வு


ADDED : ஆக 06, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,:இந்திய சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த ஜூலையில், 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளதாக, எச்.எஸ்.பி.சி.,யின் பி.எம்.ஐ., குறியீடுகள் தெரிவிக்கின்றன.

சேவைகள் துறை வளர்ச்சியைக் குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஜூனில் 60.40 புள்ளிகளாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில், இக்குறியீடு கடந்த ஜூலையில் 60.50 புள்ளிகளாக உயர்ந்து, கடந்த 11 மாதங்களில் இல்லாத உச்சத்தை அடைந்துள்ளதாக பி.எம்.ஐ., குறியீட்டு தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பி.எம்.ஐ., குறியீட்டில் 60.50 புள்ளிகள் என்பது சேவைகளில் வலுவான வளர்ச்சி வேகத்தை குறிப்பதாக உள்ளது. குறிப்பாக புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்ததே, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. புதிய வணிகங்களின் தொடர்ச்சியான அதிகரிப்பு சேவை துறையின் வளர்ச்சிக்கு மற்றொரு காரணம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சியைக் குறிக்கும் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, ஜூனில் 61.00 ஆக இருந்த நிலையில், ஜூலையில் 61.10 ஆக உயர்ந்துள்ளது.

மாதம் குறியீட்டு புள்ளிகள் 2024 ஜூலை 60.30 ஆகஸ்ட் 60.90 செப்டம்பர் 57.70 அக்டோபர் 58.50 நவம்பர் 58.40 டிசம்பர் 59.30 2025 ஜனவரி 56.50 பிப்ரவரி 59.00 மார்ச் 58.50 ஏப்ரல் 58.70 மே 58.80 ஜூன் 60.40 ஜூலை 60.50

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us