கன்டெய்னர் இன்றி கப்பலில் பாஸ்மதி ஏற்றுமதி: 75% கட்டணம் மிச்சம்
கன்டெய்னர் இன்றி கப்பலில் பாஸ்மதி ஏற்றுமதி: 75% கட்டணம் மிச்சம்
UPDATED : அக் 13, 2026 12:00 AM
ADDED : அக் 12, 2026 11:06 PM

புதுடில்லி: ஈராக்கிற்கு மூன்று பெரிய சரக்கு கப்பல்களில் 1.02 லட்சம் டன் பாஸ்மதி அரிசியை மொத்தமாக ஏற்றுமதி செய்வதன் வாயிலாக, சரக்கு கட்டணம் 75 சதவீதம் வரை குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதாவது, ஒரு டன் அரிசிக்கான சரக்கு கட்டணம் 350 டாலரிலிருந்து (33,250 ரூபாய்) 90 டாலராக (8,550 ரூபாய்) குறைத்து அனுப்பப்பட உள்ளது என அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பினர் கூறியதாவது:
சரக்கு கன்டெய்னர்கள் தட்டுப்பாடு, கப்பல் போக்குவரத்து பாதிப்பு மற்றும் அதிகரித்து வரும் சரக்கு போக்குவரத்து கட்டணங்களால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மொ த்த சரக்கு கப்பல்கள் வாயிலாக அரிசியை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சரக்கு கன்டெய்னர்கள் வாயிலாக அரிசியை அனுப்ப டன்னுக்கு 350 அமெரிக்க டாலர் (33,250 ரூபாய்) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மொத் தமாக பெரிய சரக்கு கப்பல்களில் அனுப்பும்போது 90 டாலராக (8,550 ரூபாய்) குறையும். இதன் வாயிலாக டன்னுக்கு 260 டாலர் (24,700 ரூபாய்) மிச்சமாகும்.
மூன்று கப்பல்களிலும் திட்டமிட்ட அளவு சரக்குகளை அனுப்பினால், மொத்தம் 2.66 கோடி டாலர் அளவுக்கு சரக்கு கட்டணத்தில் மிச்சமாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு தெரிவித்து உள்ளனர்.
