தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'வாட்ஸாப்' பயன்படுத்த இனி சிம் கார்டு கட்டாயம்

 'வாட்ஸாப்' பயன்படுத்த இனி சிம் கார்டு கட்டாயம்

 'வாட்ஸாப்' பயன்படுத்த இனி சிம் கார்டு கட்டாயம்


ADDED : டிச 01, 2025 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 12:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: வாட்ஸாப், டெலிகிராம், அரட்டை உள்ளிட்ட தகவல் பரிமாற்ற செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த செயலிகளைப் பயன்படுத்தும்போது, மொபைல் போனில் சிம் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும், சிம் கார்டு இல்லாமலோ அல்லது செயல் இழந்த சிம் கார்டை வைத்தோ இந்தச் செயலிகளை பயன்படுத்த முடியாது என்றும் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலிகள், பயனரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கு அவர்களது தொலைபேசி எண்னை பயன்படுத்துகின்றன.

இதன்பின் சிம் கார்டு இல்லாமலேயே, செயலிகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.

இந்நிலையில், இதை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து சைபர் மோசடிகள் நடப்பதாகவும், இதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் போனில் செயலிகளை பதிவிறக்கம் செய்யாமல் கணினியில் இணையதளம் வாயிலாக இந்த செயலிகளை பயன்படுத்தினால், பாதுகாப்பு கருதி ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் ஒருமுறை தானாகவே லாக் அவுட் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மீண்டும் பயன்படுத்த, கியு., ஆர் குறியீடு வாயிலாக இணைத்துக்கொள்ளும் வசதியை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இவற்றை நடைமுறைப்படுத்த, நிறுவனங்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us