உள்ளடக்கத்திற்கு செல்ல

'சிம்பிள் எனர்ஜி'யின் 400 கி.மீ., ரேஞ்ச் புதிய இ.வி.,
'சிம்பிள் எனர்ஜி'யின் 400 கி.மீ., ரேஞ்ச் புதிய இ.வி.,
ADDED : ஏப் 18, 2026 11:18 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு:இந்தியாவில் அதிக ரேஞ்ச் வழங்கும் மின்சார ஸ்கூட்டரை, சிம்பிள் எனர்ஜி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அல்ட்ரா என்ற பெயரில் வரும் இந்த ஸ்கூட்டர், ஒரு சார்ஜில் 400 கி.மீ., வரை செல்லும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது, நாட்டின் இரண்டாவது வேகமான ஸ்கூட்டரும் ஆகும். அதாவது, 0 - 40 கி.மீ., வேகத்தை எட்ட, வெறும் 2.77 வினாடி மட்டுமே எடுக்கிறது. இதில், 6.5 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி வந்துள்ளது.
சென்னை, பெங்களூரு, டில்லி உள்ளிட்ட நாட்டின் 70 பகுதிகளில் இந்நிறுவனத்தின் விற்பனை மையங்கள் உள்ளன. இதன் விலை கிட்டத்தட்ட 2.35 லட்சம் ரூபாய் (எக்ஸ் ே ஷ ா ரூம் ) ஆகும்.
