தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சிறு வர்த்தக செய்திகள்

சிறு வர்த்தக செய்திகள்

சிறு வர்த்தக செய்திகள்


ADDED : ஏப் 06, 2026 08:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 08:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூ.1 லட்சம் கோடி வர்த்தகம் 'அமுல்' சாதனை

பா ல் பொருள் உற்பத்தி நிறுவனமான அமுல், 2025 - -26 நிதியாண்டில் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து சாதனை படைத்துள்ளது. முந்தைய நிதியாண்டைவிட இது 11 சதவீத வளர்ச்சி. இதில், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு நிறுவனம், 73,450 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. மீதமுள்ள தொகை, குஜராத்தின் 18 மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் செய்த வர்த்தகம். 36 லட்சம் விவசாயிகளைக் கொண்டு நடத்தப்படும் அமுல் நிறுவனம், உலகின் மிகப்பெரிய விவசாயிகளுக்குச் சொந்தமான பால் கூட்டுறவு அமைப்பாகத் திகழ்கிறது.

உரம் வணிக நிறுவனங்களுக்கு இனி

90% இயற்கை எரிவாயு வினியோகம்

உ ரம் தயாரிப்பு மற்றும் தொழில் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு அளவை இன்று முதல் 90 சதவீதமாக உயர்த்தி மத்திய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அந்நிறுவனங்களின் கடந்த 6 மாத எரிவாயு பயன்பாட்டில் 70 - 75 சதவீதம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. திரவ வடிவ இயற்கை எரிவாயு இறக்குமதி வரத்து சீரானதைத் தொடர்ந்து இந்த உயர்வு உத்தரவு அறிவிப்பு வந்துள்ளது.

மேலும், வீடுகளுக்கு வழங்கப்படும் பி.என்.ஜி., எனும் குழாய் வழி இயற்கை எரிவாயு மற்றும் வாகனங்களுக்கு வழங்கப்படும் சி.என்.ஜி., எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவற்றை 100 சதவீத முன்னுரிமை கொடுத்து வினியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கிரிட் எனும் குழாய் வலையமைப்புடன், இணைக்கப்பட்ட இதர தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அவற்றின் சராசரி பயன்பாட்டில் 80 சதவீத எரிவாயு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தங்கம் இறக்குமதி

ரூ.6.40 லட்சம் கோடி ஆனது

இ ந்தியாவில் தங்கம் இறக்குமதி, 2025 -- 26 நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி காலத்தில் 28 சதவீதம் வரை அதிகரித்து கிட்டத்தட்ட 6.40 லட்சம் கோடி ரூபாய் அளவு உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டின் தங்கம் இறக்குமதி 4.96 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருந்ததாக வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும் அதன் தேவை குறையவில்லை என்பதை இந்த புள்ளிவிவரம் எடுத்துக்காட்டுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us