தணிக்கையிலிருந்து விலக்கு சிறு நிறுவனங்கள் கோரிக்கை
தணிக்கையிலிருந்து விலக்கு சிறு நிறுவனங்கள் கோரிக்கை
ADDED : ஜன 03, 2025 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு குறைவான வர்த்தகம் கொண்ட நிறுவனங்களுக்கு, தணிக்கை மற்றும் ஆய்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டு மென மத்திய அரசுக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அறியாமையால் செய்யும் தவறுகளை கையாள்வதற்கு, அதிகாரிகளுக்கான வழிகாட்டுதலுடன், உரிய நிதியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். பிழைகளை மன்னிக்கும் திட்டத்தையும் துவங்க வேண்டும்.
ஜி.எஸ்.டி., தாக்கலின் போது ஏற்படும் சிறிய பிழை அல்லது காலதாமதத்துக்கு அபராதம் விதிக்க கூடாது. ஜி.எஸ்.டி., பதிவை ரத்து செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்துவதோடு, அவற்றுக்கு விதிக்கப்படும் அபராதத்தையும் குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.