தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு சலுகை தரும் 'ஸ்மார்ட் கார்டு'

 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு சலுகை தரும் 'ஸ்மார்ட் கார்டு'

 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு சலுகை தரும் 'ஸ்மார்ட் கார்டு'


ADDED : ஜன 24, 2026 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2026 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் உள்ள, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, முதலீட்டு வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் வழங்குகிறது.

தொழிலில் ஆரம்ப நிலையில் இருப்பதால் இணையதளம், மென்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப சேவைகள், சட்டம் மற்றும் நிதி ஆலோசனை போன்றவற்றுக்கு ஸ்டார்ட்அப்கள் அதிகம் செலவு செய்கின்றன.

அந்நிறுவனங்களின் ஆரம்பகட்ட செலவுகளை, சலுகை விலையில் பெற ஸ்மார்ட் கார்டை, ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் வழங்குகிறது. இதற்காக அந்நிறுவனத்துடன், பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன.

இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்மார்ட் கார்டு சலுகைகளை பெற விரும்பும் நிறுவனங்கள், 'www.startuptn.in' இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஐ.டி., சேவைகள், நிதி, அலுவலக இடம் குறித்த தகவல் தரும் நிறுவனங்கள், மனிதவள மேலாண்மை, மார்க்கெட்டிங், பிராண்டிங் துறைகளில் ஸ்டார்ட்அப்களுக்கு சலுகை வழங்க விரும்பும் நிறுவனங்கள், 'form.startuptn.in/SSCV' தளத்தில் பதிவு செய்யலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us