தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ பாதுகாப்பு கவச தயாரிப்பு ஆர்டர் பெற்றது எஸ்.எம்.பி.பி.,

 பாதுகாப்பு கவச தயாரிப்பு ஆர்டர் பெற்றது எஸ்.எம்.பி.பி.,

 பாதுகாப்பு கவச தயாரிப்பு ஆர்டர் பெற்றது எஸ்.எம்.பி.பி.,


ADDED : மார் 12, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 02:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி, துணை ராணுவ படையினருக்கு, 10,000 புல்லட் புரூப் கவசங்களை வினியோகிக்க, எஸ்.எம்.பி.பி., நிறுவனம் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கூடுதல் ஆர்டர் பெற்றுள்ளது. ஏற்கனவே 40,000 புல்லட் புரூப் கவசங்களுக்கு ஆர்டர் பெற்ற நிலையில், தற்போது 50,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாப்பு கவசங்கள், உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை, சாஸ்த்ரா சீமா பால் ஆகியவற்றுக்கு வினியோகிக்கப்படுகிறது.

இதுவரை வந்த ஆர்டரில், 28,000 பாதுகாப்பு கவசங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. மீதம், வரும் நிதியாண்டுக்குள் வினியோகம் செய்யப்படும். இந்நிறுவனம் 2018ல், ராணுவ அமைச்சகத்துக்கு, 1.86 லட்சம் புல்லட் புரூப் கவசங்களை வினியோகம் செய்துள்ளது. அவசர கொள்முதலாக, இரண்டு லட்சம் கவச ஹெல்மெட்களும் வினியோகிக்கப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us