தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/‘சொமெக்ஸ் 2027’ தொழில் கண்காட்சி

‘சொமெக்ஸ் 2027’ தொழில் கண்காட்சி

‘சொமெக்ஸ் 2027’ தொழில் கண்காட்சி


UPDATED : நவ 28, 2026 12:00 AM

ADDED : நவ 27, 2026 10:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 12:00 AM ADDED : நவ 27, 2026 10:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமான ‘டான்ஸ் டியா’ சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், வரும் ஜனவரி 21 முதல் 23ம் தேதி வரை, ‘சோர்சிங் அண்டு மேனுபேக்சரிங் சப்ளை செயின் - சொமெக்ஸ் 2027’ என்ற கண்காட்சி நடக்க உள்ளது. தமிழக எம்.எஸ்.எம்.இ., நிறு வனங்களுக்கு மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்களின் ‘ஆர்டர்’கள் அதிகளவில் கிடைக்க இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

யாரெல்லாம் பங்குபெறலாம்



அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு தங்கள் உற்பத்தி திறனை காட்சிப்படுத்த விரும்பும் தொழில்முனைவோர். குறைந்த கட்டணத்தில் பங்கேற்கும் வகையில், அரங்கு அமைக்கும் செலவுக்கு, தகுதிக்கு ஏற்ப, தமிழக அரசின் ‘பேம் டி.என்’ அல்லது மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., திட்டத்தின் கீழ் 80 முதல் 100 சதவீதம் வரை மானியம் பெற வாய்ப்புள்ளது.

என்ன தெரிந்துகொள்ளலாம்



ரயில்வே, பி.எச்.இ.எல்., உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைப்படும் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3வது இடத்தில் இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களின் கொள்முதலில் 86,000 கோடி ரூபாயுடன் ஒன்பதாவது இடத்திலேயே உள்ளது. இதை 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி, முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வருவதே ‘சொமெக்ஸ்’ கண்காட்சியின் நோக்கம்.

– வாசுதேவன், தலைவர், டான்ஸ்டியா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us