தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ டிராக்டர் விற்பனை வளர்ச்சி 35% தாண்டிய 'சோனாலிகா'

 டிராக்டர் விற்பனை வளர்ச்சி 35% தாண்டிய 'சோனாலிகா'

 டிராக்டர் விற்பனை வளர்ச்சி 35% தாண்டிய 'சோனாலிகா'


ADDED : மே 09, 2026 03:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 03:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நாட்டின் டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சோனாலிகா டிராக்டர்ஸ், 2026- - 27 நிதியாண்டை வலுவாக தொடங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தமாக 16,223 டிராக்டர்களை விற்பனை செய்து, இதுவரை இல்லாத சிறந்த ஏப்ரல் மாத விற்பனையை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சியால், டிராக்டர் துறையில் அதிக சந்தை பங்கு உயர்வு பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக சோனாலிகா திகழ்கிறது.

நிறுவனத்தின் மொத்த வளர்ச்சி விகிதம் 35.60 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், டிராக்டர் விற்பனை துறையின் கணிக்கப்பட்ட 27 சதவீத வளர்ச்சியையும் இது தாண்டியுள்ளது.

விவசாயிகளை மையமாக கொண்ட தனது வணிகத்தை தொடர்ந்து முன்னிறுத்தி வரும் நிறுவனம், தனது 30வது ஆண்டில் மேம்பட்ட வேளாண் தொழில்நுட்ப புதுமைகள் வாயிலாக, விவசாயிகளின் உற்பத்தித்திறன் மற்றும் வருமானத்தை அதிகரிக்க கவனம் செலுத்தி வருகிறது.

உணவு தானிய உற்பத்தி சாதனை அளவில் உயர்ந்து வருவது, ஜி.எஸ்.டி., குறைப்புக்கு பின், வேளாண் இயந்திரமயமாக்கல் அதிகரித்திருப்பது, இந்திய வேளாண் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை, தொழில்நுட்ப மையப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் வழிநடத்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us