தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/புவிசார் குறியீடு பொருட்களுக்கு விரைவில் டிஜிட்டல் கட்டமைப்பு

புவிசார் குறியீடு பொருட்களுக்கு விரைவில் டிஜிட்டல் கட்டமைப்பு

புவிசார் குறியீடு பொருட்களுக்கு விரைவில் டிஜிட்டல் கட்டமைப்பு


UPDATED : அக் 08, 2026 06:39 PM

ADDED : அக் 08, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 06:39 PM ADDED : அக் 08, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உள்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற கைவினை பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் மனித நல சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, ஒரு பொருள் எங்கு, யாரால் உற்பத்தி செய்யப்பட்டது என்ற முழு விபரங்களும், கியு.ஆர்.,பார் கோடு போன்ற பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பின் வாயிலாக ஆவணப்படுத்தப்பட உள்ளன.

கைவினைஞர்களுக்கு என்ன பயன்?

*வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை அதிகரிப்பதன் வாயிலாக, பொருட்களின் விற்பனை உயர்ந்து கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்

*கைவினைஞர்களின் தனித்துவமான கலாச்சார அடையாளத்தை, தொழில்நுட்பத்தின் வாயிலாக பாதுகாத்துக்கொள்ள முடியும்

*தற்போதைய சந்தை சூழலுக்கு ஏற்றவாறு பொருட்களின் மதிப்பை உயர்த்தி, கைவினைஞர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?

*வாடிக்கையாளர் வாங்கும் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் உண்மைத்தன்மையை, இந்த டிஜிட்டல் கட்டமைப்பு வாயிலாக எளிதாக தெரிந்துகொள்ளலாம்

*பொருள் தயாரான ஊர் மற்றும் அதனை உருவாக்கிய கைவினைஞர் குறித்த முழு பின்னணியையும் அறிய முடியும்

*போலி பொருட்களை தவிர்த்து, அசல் பொருட்களுக்கு உரிய விலையை கொடுத்து முழு நம்பிக்கையுடன் வாங்கும் சூழல் உருவாகும் என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us