சென்னையில் பிப்., 10, 11ல் 'சோர்ஸ் இந்தியா' மாநாடு
சென்னையில் பிப்., 10, 11ல் 'சோர்ஸ் இந்தியா' மாநாடு
ADDED : ஜன 14, 2026 01:28 AM

சென்னை : இந்திய மின்னணுவியல் தொழில்கள் சங்கம் சார்பில், 'சோர்ஸ் இந்தியா - எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செயின் - 2026' என்ற வணிக சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்.,10, 11ம் தேதிகளில் நடக்க உள்ளது.
இதில், மின்னணு உற்பத்தி சூழல் அமைப்பில் உள்ள வாங்குவோர், விற்பனையாளர் சந்திப்பு, மாநாடு, கண்காட்சி அரங்குகள் இடம்பெற உள்ளன.
மேலும், மின்னணு பாகங்கள், செமிகண்டக்டர், தொலைதொடர்பு சாதனங்கள், பாதுகாப்பு மின்னணுவியல், தொழில் மற்றும் மருத்துவ மின்னணுவியல், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் என, வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை இத்தொழில்கள் உள்ளடக்கியுள்ளன.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், 'பேம் டி.என்' நிறுவனம் ஆதரவு அளிக்கின்றன.
நிகழ்ச்சியில் முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கண்காட்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கவும், போக்குவரத்து செலவுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. இதை பெறுவதற்கு, 'sourceindia.expoplato.com/events' தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

