ADDED : ஜன 20, 2026 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோ யாமீல் ஏற்றுமதி கடந்த டிசம்பரில் 40 சதவீதம் குறைந்துள்ளதாக இந்திய எண்ணெய் பிரித்தெடுப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சோயாமீலுக்கான தேவை உள்நாட்டில் குறைந்துள்ளதாகவும்; அரிசி மற்றும் மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் தயாரிக்கும்போது கிடைக்கும் உபபொருள்கள் தான் அதிகம் வாங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவிலிருந்து தொடர்ந்து ஆதரவு கிடைத்தபோதிலும், சர்வதேச சந்தையில் போட்டியின் காரணமாக, விலை குறைந்து ஏற்றுமதியும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

