ADDED : மார் 07, 2026 01:48 AM

சென்னை,:சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி கிடைக்க சிறப்பு முகாமை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் நடத்த உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது .
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னை நந்தனத்தில் உள்ள ஸ்டார்ட் அப் டி.என்., அலுவலகத்தில் கடன் முகாம் நடத்தப்படும்.
''இதில், பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன், கடன்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பங்கேற்க, 'form.startuptn.in/CHCA' என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். எந்த தேதியில் நடத்தப்படும் என்பது குறித்து, விரைவில் அறிவிக்கப்படும்,”என்றார்.

