சென்னையில் 13,000 ஊழியர்களுடன் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் அலுவலகம்
சென்னையில் 13,000 ஊழியர்களுடன் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் அலுவலகம்
ADDED : அக் 10, 2025 11:24 PM

சென்னை, அக். 11-
உலகளாவிய வங்கி நடவடிக்கைகளில் இந்தியாவின் முக்கிய பங்கை முன்னிறுத்தும் நடவடிக்கையாக, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குளோபல் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம், சென்னையின் தரமணியில் உள்ள டி.எல்.எப்., டவுன்டவுனில் உலகளவில் அதன் மிகப்பெரிய அலுவலகத்தை திறந்துள்ளது.
இங்கு, 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். சென்னையின் ஐ.டி., வழித்தடத்தின் அருகில் அமைந்துள்ள இந்த அலுவலகம், இந்தியாவில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நிறுவனத்தின் நீண்டகால முதலீட்டை பிரதிபலிக்கிறது.
'இந்த அலுவலகம் இந்தியாவின் புதுமை மற்றும் வாய்ப்புகளின் மீதான எங்கள் நம்பிக்கையின் வெளிப் பாடு' என்று ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவின் தலைவர் நோயல் எடர் கூறி னார்.
புதிய அலுவலக சிறப்பம்சங்கள்
அலுவலகத்தில் 13,000 ஊழியர்கள் பணியாற்றும் அளவிற்கு விசாலமானது
தரமணியில் உள்ள டி.எல்.எப்., டவுன்டவுனில் உள்ள முதன்மையான இடம்
ஒவ்வொரு துளி நீரையும் மறுசுழற்சி செய்யும் ஸ்மார்ட் நீர் அமைப்புகள்
டிஜிட்டல் வாயிலாக இயக்கப்படும் பணி மண்டலங்கள்
மருத்துவ மையம், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பணிச்சூழலியல் இடங்கள்.