UPDATED : அக் 30, 2026 03:41 PM
ADDED : அக் 30, 2026 03:38 PM
விருது
மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையான டி.பி.ஐ.ஐ.டி., ‘தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 6.0’ போட்டிக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 20 துறைப் பிரிவுகள் மற்றும் மூன்று சிறப்பு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
யாருக்கு?
*டி.பி.ஐ.ஐ.டி., அங்கீகாரம் பெற்ற தகுதியான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
*பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப்கள் மற்றும் வடகிழக்கு மாநில ஸ்டார்ட்அப்களுக்கு தனி சிறப்பு பிரிவுகள்
*மாணவர் புதுமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கும் தனி விருது பிரிவு
வழங்கப்படும் அங்கீகாரம்
*20 துறைப் பிரிவுகளில் ஒவ்வொரு வெற்றியாளருக்கும் 25 லட்சம் ரூபாய்
*பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப் வெற்றியாளர்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய்
*மாணவர் புதுமையாளர் பிரிவுக்கு மொத்தம் 25 லட்சம் ரூபாய் பரிசு தொகுப்பு
கடைசி நாள்: நவம்பர் 20, 2026 விண்ணப்பம்:startupindia.gov.in
வாய்ப்பு
தமிழகத்தை சேர்ந்த ஆரம்பநிலை ‘இன்டர்நெட் ஆப் எவ்ரிதிங்’ தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களுக்கு, தொழில்நுட்ப வழிகாட்டுதல், ஆய்வக வசதி, மாதிரி தயாரிப்பு உதவி மற்றும் சந்தை தொடர்புகளை வழங்கும் இன்குபேஷன் திட்டத்தை ஐ.டி.என்.டி., ஹப் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., ‘பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன்’ இணைந்து செயல்படுத்துகின்றன.
யாருக்கு?
*தமிழகத்தை சேர்ந்த ஆரம்பநிலை தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள்
*தயாரிப்பு அல்லது தொழில்நுட்பத்தை ஆரம்ப கட்டத்தில் உருவாக்கி வரும் நிறுவனங்கள்
*இன்டர்நெட் ஆப் எவ்ரிதிங் சார்ந்த தீர்வுகளை உருவாக்கும் ஸ்டார்ட்அப்கள்
வழங்கப்படும் ஆதரவு
*மேம்பட்ட ஆய்வக வசதிகளை பயன்படுத்தும் வாய்ப்பு
*தொழில்நுட்ப மற்றும் தொழில் வழிகாட்டுதல்
*மாதிரி தயாரிப்பு, சோதனை மற்றும் மேம்பாட்டுக்கு உதவி
*சந்தை தொடர்புகள் மற்றும் வணிக வளர்ச்சி வழிகாட்டுதல்
*செயற்கை நுண்ணறிவு, கிளவுட் மற்றும் நெட்வொர்க்கிங் சார்ந்த திறன் மேம்பாடு
