'ஸ்டார்ட் அப்கள் சந்தைப்படுத்தலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'
'ஸ்டார்ட் அப்கள் சந்தைப்படுத்தலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'
ADDED : பிப் 14, 2026 01:05 AM

சென்னை: தமிழக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சந்தைப்படுத்தலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப பல்கலை வளாகத்தில், ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் சார்பில், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டும், 'இன்செப்டா 2026' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை 13,400-ஐ கடந்துள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் உள்ள 92 சதவீத ஸ்டார்ட் அப்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
நாம் தொழில்நுட்ப அடிப்படையில் வலுவாக இருந்தாலும், வேலை உருவாக்கம், விற்பனை, சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில், பிஸினஸ் இன்குபேஷன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நிதி திரட்டலில், கிட்டத்தட்ட 60 சதவீதம் நிறுவனர்கள் அடிப்படையிலும், 40 சதவீதம் மட்டுமே தொழில் மாதிரி அடிப்படையிலும் முதலீடு செய்யப்படுகின்றன. இந்த போக்கு மாற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
