தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ மாநில வர்த்தக செய்திகள்

 மாநில வர்த்தக செய்திகள்

 மாநில வர்த்தக செய்திகள்


ADDED : ஆக 30, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 03:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒடிஷா

டிஜிட்டல் விவசாய சேவை 6 புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒடிஷா அரசு, டிஜிட்டல் விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கான சேவைகளை மேம்படுத்த அஞ்சல் துறை, இக்ரிசாட், எம்.எஸ்.எஸ்.ஆர்.எப் ஆகிய அமைப்புகளுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. டிஜிட்டல் விவசாய சேவைகளை விரிவுபடுத்தவும், விதை அமைப்புகளை வலுப்படுத்தவும், பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் சுயசார்பை ஆதரிக்கவும் இந்த ஒப்பந்தங்கள் உதவும்.

மஹாராஷ்டிரா

முறைகேடு நடந்ததாக புகார் சிப்லா உரிமம் ரத்து

சிப்லா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் புனே பிரிவில் தயாரிக்கப்படும் 'ரியாக்டின் பிளஸ்' மாத்திரைகளின் சேமிப்பு, பேக்கேஜிங் மற்றும் திரும்ப பெறும் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறி உரிமத்தை மஹாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து சிப்லா நிறுவனம் நீதிமன்றத்தை நாடுவதாக தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட்

ரூ.602 கோடி ரயில் திட்டம் அசோகா பில்ட்கானுக்கு ஆர்டர்

உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் - கர்ணபிரயாக் புதிய ரயில் பாதையில் நான்கு சுரங்கப்பாதைகளுக்கான மின்சார மற்றும் இயந்திர பணிகளை மேற்கொள்வதற்காக, ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்திடமிருந்து 602.16 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, நாசிக்கை சேர்ந்த அசோகா பில்ட்கான் நிறுவனம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us