தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஜன 01, 2024 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2024 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தயங்கி நின்ற வர்த்தகர்கள்

 நம் பங்குச் சந்தைகளில், புத்தாண்டு தினம் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. சர்வதேச அளவில் எந்தவொரு புதிய சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை. இப்போது வரை அமெரிக்காவில் எல்லாமே ஆரோக்கியமாக இருக்கின்றன. ஆனால், செங்கடல் பகுதியில் நடைபெறும் ஹவுதி போராட்டக்காரர்களின் அத்துமீறல்கள், வர்த்தகர்களை அச்சப்பட வைத்தது.
கொரோனா தொற்று மீண்டும் பரவுகிறதோ என்ற கவலையும் வர்த்தகர்களிடம் இருந்தது. அதனால், வர்த்தகர்கள் துணிந்து முடிவெடுத்து, பங்குகளை வாங்கிக் குவிக்கத் தயங்கினர். காலையில் சரிவுடன் துவங்கிய நம் சந்தைகள், பின்னர் கொஞ்ச நேரம் பச்சை வண்ணம் பூண்டது. கடைசியில் 'பிராபிட் புக்கிங்' அலையில், சந்தைகள் அதுவரை பெற்ற லாபத்தை இழந்து, சிறு ஏற்றத்துடன் முடிவடைந்தது
 எட்டு முக்கிய உற்பத்தித் துறைகளின் வளர்ச்சி, ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு, நவம்பர் மாதத்தில் 7.80 சதவீதமாக சரிந்துபோனது, வர்த்தகர்களை யோசிக்க வைத்தது
 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலத்தில், 8.04 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, ஏப்ரல் முதல் நவம்பர் வரையான காலத்தில், 9.07 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக சி.ஏ.ஜி. சொன்னது
 டிசம்பர் மாதத்தில் பல்வேறு நிறுவனங்களின் வாகன விற்பனை கணிசமாக குறைந்து போனது
 வெளிநாடுகளில் இருந்து வளர்ச்சிக்கு இடையூறுகள் தோன்றினாலும், நாம் இந்த நிதியாண்டில், மிகச் சவுகரியமாக 6.50 சதவீத மொத்த உள்நாட்டு வளர்ச்சியைப் பெறுவோம் என்று சொன்ன நிதி அமைச்சகத்தின் அறிக்கை கொஞ்சம் தெம்பு தந்தது
 வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயலும் நல்வாக்கு அருளினார். உள்கட்டுமானத் துறையில் இந்தியா காட்டும் கவனத்தினால், இங்கே பொருளாதாரம் நன்கு வளர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்
 வர்த்தக நேர முடிவில், பொதுத் துறை வங்கிகள், சுகாதாரப் பங்குகள் லாபத்தில் முடிவடைய, வங்கிகள், வாகனங்கள், நுகர்வோர் துறை, நிதிச் சேவைத் துறை ஆகியவை நஷ்டத்தில் முடிவடைந்தன.



சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 72,240.26நேற்றைய முடிவு: 72,271.94மாற்றம்: 31.68 ஏற்றம் பச்சைநிப்டிமுந்தைய முடிவு : 21,731.40நேற்றைய முடிவு: 21,741.90மாற்றம்: 10.50 ஏற்றம் பச்சை



ஏற்றம் கண்ட பங்குகள்

 நெஸ்லே இந்தியா  அதானி என்டர்பிரைசஸ்  அதானி போர்ட்ஸ்  டெக் மஹீந்திரா  கோல் இந்தியா



இறக்கம் கண்ட பங்குகள்

 ஐச்சர் மோட்டார்ஸ்  பார்தி ஏர்டெல்  எம் அண்டு எம்.,  பஜாஜ் ஆட்டோ  ஹிண்டால்கோ



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us