டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : பிப் 27, 2024 07:24 AM
முந்தைய முடிவு : 22,212.70நேற்றைய முடிவு: 22,122.05மாற்றம்: 90.66 இறக்கம் சிவப்பு
முந்தைய முடிவு: 73,142.80 நேற்றைய முடிவு: 72,790.13மாற்றம்: 352.67 இறக்கம் சிவப்பு
தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளாக, கடந்த வெள்ளிக்கிழமையை தொடர்ந்து, நேற்றும் இந்திய பங்குச் சந்தைகள் சரிவை கண்டன தகவல் தொழில்நுட்பம், உலோகம், நுகர்பொருட்கள் போன்ற துறைகளைச் சார்ந்த பங்குகளில் லாபத்தை அறுவடை செய்யும் பொருட்டு, அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டன மற்றும் உலக நிலைமைகள் ஆகியவை காரணமாக சந்தை சரிவை கண்டது சென்செக்ஸ் கிட்டத்தட்ட 353 புள்ளிகள் அளவுக்கு சரிவை கண்டது. இப்பிரிவில் உள்ள 30 நிறுவன பங்குகளில், 26 நிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன. இதேபோல் நிப்டி, நேற்றைய வர்த்தகத்தில் 91 புள்ளிகள் அளவுக்கு சரிவை கண்டது. மொத்தம் 50 நிறுவனங்கள் கொண்ட இப்பிரிவில், 37 நிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன 'இன்போசிஸ், டி.சி.எஸ்., - ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' போன்ற நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. சென்செக்ஸில், 'ஏசியன் பெயின்ட்ஸ்' 3.9 சதவீதம் அளவுக்கு விலை வீழ்ச்சியை கண்டது. 'ஆதித்ய பிர்லா' குழுமத்தைச் சேர்ந்த, 'கிராஸிம் இண்டஸ்ட்ரி' நிறுவனம், பெயின்ட் வணிகத்தில் நுழைய இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து, ஏசியன் பெயின்ட்ஸ் விலை சரிந்தது அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றின் ஜி.டி.பி., தரவுகள், ஐரோப்பிய மண்டலத்தின் பணவீக்கம், அமெரிக்காவில் வேலையற்றோர் குறித்த தரவுகள் போன்றவை வெளியாக இருப்பதை அடுத்து, முதலீட்டாளர்கள் சற்று கவனமுடன் சந்தையை அணுகினர். இந்திய சந்தைகள் மட்டுமின்றி பெரும்பாலான ஆசிய சந்தைகளும் திங்களன்று சரிவையே சந்தித்தன. அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளியன்று 1,276 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை மேற்கொண்டதாக தரவுகள் வெளியாகி உள்ளன.
ஏற்றம் கண்டவை 42%சரிவை கண்டவை 55%மாற்றம் இல்லாதவை 3%
எல்., அண்டு டி., பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதானி என்டர்பிரைசஸ் பி.பி.சி.எல்., டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ்
ஏசியன் பெயின்ட்ஸ் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் ஹிண்டால்கோ டிவிஸ் லேப்ஸ் டாடா ஸ்டீல்