டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
மாவட்டம்
ADDED : மார் 05, 2024 12:08 AM
முந்தைய முடிவு : 22,378.40நேற்றைய முடிவு: 22405.60மாற்றம்: 27.20 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு: 73,806.15நேற்றைய முடிவு: 73872.29மாற்றம்: 66.14 ஏற்றம் பச்சை
இந்திய பங்கு சந்தைகள், தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக நேற்றும் ஏற்றத்தை சந்தித்தன. சென்செக்ஸ் நிப்டி ஆகிய குறியீடுகள், புதிய உச்சத்தை தொட்டன எரிசக்தி, வங்கி ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகள் அதிகம் விலை உயர்ந்ததை அடுத்து, சென்செக்ஸ் நிப்டி ஆகியவை புதிய உச்சம் கண்டன உலகளாவிய தர நிர்ணய நிறுவனமான 'மூடீஸ்' இந்தியாவின் நடப்பாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த தன் கணிப்பை உயர்த்தி அறிவித்தது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டில் 6.1 சதவீதமாக இருக்கும் என, முன்னர் கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது தன் கணிப்பை 6.8 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது, மூடீஸ் நிறுவனம். கடந்த 2023ல் எதிர்பார்த்ததை விட அதிகமான வளர்ச்சியை கண்டதன் அடிப்படையில், இந்நிறுவனம் தற்போது தன்னுடைய கணிப்பை உயர்த்தி உள்ளது வங்கி மற்றும் எரிசக்தி துறையை சேர்ந்த பங்குகள் அதிகளவில் வாங்கப்பட்டதும், ஆசிய சந்தைகளின் சாதகமான போக்கும், சந்தையின் உயர்வுக்கு ஆதாரமாக அமைந்தன. ஆசிய சந்தையை பொறுத்தவரை, சியோல் டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் ஆகிய சந்தைகள் ஏற்றம் கண்டன. அமெரிக்க சந்தைகளும், கடந்த வெள்ளியன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற சிறப்பு வர்த்தகத்தின் போது, கிட்டத்தட்ட 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 35%இறக்கம் கண்டவை : 62%மாற்றம் காணாதவை: 3%
என்.டி.பி.சி., எச்.டி.எப்.சி., லைப் பவர் கிரிட் கார்ப் ஓ.என்.ஜி.சி., பி.பி.சி.எல்.,
ஐச்சர் மோட்டார்ஸ் ஜெ.எஸ்.டபுள்யு., ஸ்டீல் மஹிந்திரா அண்டு மஹிந்திரா எஸ்.பி.ஐ., லைப் இன்ஷூரன்ஸ் பிரிட்டானியா