தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : மார் 12, 2024 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 06:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

முந்தைய முடிவு : 22,493.55நேற்றைய முடிவு: 22,332.65மாற்றம்: 160.90 இறக்கம் சிவப்பு



சென்செக்ஸ்

முந்தைய முடிவு: 74,119.39நேற்றைய முடிவு: 73,502.64மாற்றம்: 616.75 இறக்கம் சிவப்பு



வாங்கி கட்டிய வங்கி பங்குகள்


 தொடர்ந்து இரண்டு வர்த்தக நாட்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில், பங்கு சந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன
 உலோகம், வங்கி ஆகிய துறைகளை சேர்ந்த பங்குகள், நேற்று அதிகம் விற்பனை செய்யப் பட்டதை தொடர்ந்து, சந்தை இறக்கத்தை கண்டது. குறிப்பாக, வங்கி துறை சார்ந்த பங்குகளில் லாபத்தை அறுவடை செய்யும் வகையில் அதிகளவிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டன
 தேர்தல் பத்திரங்கள் விற்பனை குறித்த விபரங்களை செவ்வாயன்று வழங்க வேண்டும் என, எஸ்.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் தொடர்ச்சி யாக, வர்த்தகத்தின் இடையே, இவ்வங்கி பங்குகள் விலை, 2 சதவீதம் வரை சரிவைக் கண்டது
 உலக சந்தைகளின் போக்கும் சாதகமாக இல்லை. வட்டி விகிதம் மற்றும் பணவீக்க விகித கவலைகளினால், உலக சந்தைகளில், பங்குகளை விற்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது, நம் உள்நாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் பாதிப்பதாக அமைந்தது
 இதையடுத்து, முதலீட்டாளர்கள் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் முதலீடுகளை மேற்கொண்டனர். மேலும் பலர், தங்களுடைய முதலீடுகளை தங்கத்துக்கு மாற்றி அமைத்துக் கொண்டனர்
 கடந்த வெள்ளியன்று, அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவைக் கண்டதை அடுத்து, அதன் பாதிப்பு இந்திய சந்தைகளிலும் திங்களன்று பிரதிபலித்தது
 உலகளவிலான பிரன்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 0.29 சதவீதம் உயர்வைக் கண்டு, 82.32 டாலராக இருந்தது
 அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், கடந்த வியாழன்று, கிட்டத்தட்ட 7,304 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். கடந்த வெள்ளியன்று, மகாசிவராத்திரியை முன்னிட்டு சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது
 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று 8 பைசா அளவுக்கு குறைந்து 82.75 பைசாவாக இருந்தது.



நிறுவனங்கள் நிலை

(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 23%இறக்கம் கண்டவை : 74%மாற்றம் காணாதவை: 3%



ஏற்றம் கண்ட பங்குகள்

 அப்போலோ ஹாஸ்பிட்டல் நெஸ்ட்லே எஸ்.பி.ஐ., லைப் இன்ஷூரன்ஸ் சிப்லா பஜாஜ் பின்சர்வ்



இறக்கம் கண்ட பங்குகள்

 டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் பஜாஜ் ஆட்டோ பவர் கிரிட் கார்ப்பரேஷன் டாடா ஸ்டீல் எஸ்.பி.ஐ.,



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us