ADDED : மே 28, 2026 11:13 PM

சென்னை: இரண்டு நிமிடங்களுக்கு உட்பட்ட சிறிய கதை தொடர்களுக்கான 'கதை ஷார்ட்ஸ்' எனும் ஓ.டி.டி. தளம் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து கதை ஷார்ட்ஸ் நிறுவனர் கரண் தயாநிதி கூறியதாவது:
'குட்டி சீரிஸ்' என்ற பெயரில் மொபைல் வாடிக்கையாளர்களுக்கான 2 நிமிட கதை தொடர்களை நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறோம். ஒரு தொடரை காண்பதற்கு 20 ரூபாய் செலுத்த வேண்டும்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழிகளில் இத்தொடர்கள் உருவாக்கப்படும். வழக்கமான தொலைக்காட்சி தொடர்கள் இதில் ஒளிபரப்பாகாது.
இவ்வாண்டிலேயே 100க்கும் மேற்பட்ட குறு நாடகங்கள் தயாரிக்கப்படும். இதுதவிர, 'கதை கிளப்' எனும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. படைப்பாளிகள் தங்களிடம் உள்ள கதைகளை எங்களிடம் வழங்கி, ஒப்பந்தம் செய்துகொண்டு படமாக இயக்கலாம். தற்போது 12,000க்கும் மேற்பட்ட படைப்பாளிகள், கலைஞர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பங்கேற்பின் தன்மைக்கு ஏற்றபடி காப்புரிமைக்கான கட்டணம், ஊதியம் ஆகியவை வழங்கப்படும்.
தற்போது 50 பேர் கொண்ட குழுவாக இயங்குகிறோம். இதுதவிர, 800க்கும் மேற்பட்ட கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 4,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
