தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'சர்க்கரை உற்பத்தி 4சதவிகிதம் குறையும்'

 'சர்க்கரை உற்பத்தி 4சதவிகிதம் குறையும்'

 'சர்க்கரை உற்பத்தி 4சதவிகிதம் குறையும்'


UPDATED : மார் 07, 2026 02:45 AM

ADDED : மார் 07, 2026 02:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2026 02:45 AM ADDED : மார் 07, 2026 02:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:நடப்பாண்டில் சர்க்கரை உற்பத்தி 4.40 சதவீதம் குறையும் என்று அனைத்து இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

முந்தைய கணிப்பில் 296 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போதைய திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 283 லட்சம் டன்னாக குறையும். முந்தைய 2024- - 25ம் ஆண்டில் மொத்த சர்க்கரை உற்பத்தியான 262 லட்சம் டன்னைவிட இது கூடுதல். 32 லட்சம் டன் எத்தனால் தயாரிப்புக்காக திருப்பிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.Image 1545362மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில், தொடர் மழை மற்றும் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை காரணமாக கரும்பின் வளர்ச்சியும் அறுவடைக்கான முதிர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளதே சர்க்கரை உற்பத்தி குறைவுக்கான காரணமாகும்.

மஹாராஷ்டிரா சர்க்கரை உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த அக்டோபரில் பெய்த அதிகப்படியான மழையால் மஹாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் கரும்பு தோட்டங்களில் தண்ணீர் தேங்கி உற்பத்தி பாதிக்கப்பட்டதால் 108 லட்சம் டன்னிலிருந்து 99 லட்சம் டன்னாக உற்பத்தி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.Image 1545363இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பிலும் நாட்டின் சர்க்கரை உற்பத்தி 5.5 சதவீதம் குறையும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us