தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ துணை நிறுவனங்களை இணைக்கிறது 'சன் பார்மா'

துணை நிறுவனங்களை இணைக்கிறது 'சன் பார்மா'

துணை நிறுவனங்களை இணைக்கிறது 'சன் பார்மா'


ADDED : டிச 12, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:நிறுவனத்தின் கட்டமைப்பை எளிமைப்படுத்தும் நடவடிக்கையாக, தன்னுடைய ஐந்து துணை நிறுவனங்களை இணைப்பதற்கு, சன் பார்மாசூட்டிகல் நிறுவனம் முடிவு செய்து உள்ளது.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மாசூட்டிகல், உலகம் முழுதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வினியோகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட 4.36 லட்சம் கோடி ரூபாய். கடந்த 2023 --24ம் நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையில், இந்தியாவில் நிறுவனத்தின் கட்டமைப்பை எளிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு, இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்ததாக சன் பார்மா தெரிவித்துஇருந்தது.

இதன்படி, 'சன் பார்மாசூட்டிகல் மெடிகேர், கிரீன் எக்கோ டெவலப்மென்ட் சென்டர், பாஸ்ட் ஸ்டோன் மெர்சன்டைல், ரியல் ஸ்டோன் மல்டி டிரேடு, ஸ்கைசென் லேப்ஸ்' ஆகிய நிறுவனங்கள், சன் பார்மாசூட்டிகலுடன் இணைந்து ஒரே நிறுவனமாக மாற உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us