தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ' மென்பொருள் ராயல்டி' வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 ' மென்பொருள் ராயல்டி' வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 ' மென்பொருள் ராயல்டி' வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


ADDED : மே 13, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 05:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாட்டு மென்பொருட்களை வாங்கினால் அதற்கு ராயல்டி வரி விதிக்க முடியாது என்ற தீர்ப்புக்கு எதிரான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

நம் நாட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து சாப்ட்வேர் வாங்குவது வழக்கம். 'அவ்வாறு வாங்கிப் பயன்படுத்தும்போது, உரிமையும் கைமாறுகிறது. எனவே, அதற்கு வரி செலுத்த வேண்டும்' என்று வருமான வரித்துறை கூறியிருந்தது. ஐ.பி.எம்., சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ், ஜி.இ., இந்தியா, ஹெச்.பி., போன்ற நிறுவனங்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்தன. கடந்த 2021ல் இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'சாப்ட்வேர் பயன்படுத்தும்போது காப்புரிமை கைமாறுவதில்லை. எனவே அதற்கு வரி விதிக்க முடியாது' என்று தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து வருமான வரித்துறை 2வது முறையாக தாக்கல் செய்த சீராய்வு மனுவையும், உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us