உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 15, 2026 01:22 AM

அ நிறம் | அளவு
தைபே: சட்டவிரோதமாக ஆட்களை பணியமர்த்திய குற்றச்சாட்டில், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான, 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் சி.இ.ஓ., பீட் லாவ் உட்பட, மூன்று பேரை கைது செய்ய, தைவான் அரசு வாரன்ட் பிறப்பித்துள்ளது.
சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே பிரச்னை நிலவும் நிலையில், சீன நிறுவனங்கள் சிப், பிற தொழில்நுட்ப பணிகளுக்கு அரசின் ஒப்புதல் இன்றி பணியமர்த்தல் மேற்கொள்ள தைவான் அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இந்நிலையில், தைவானில் ஒன்பிளஸ் நிறுவனம், 70க்கும் மேற்பட்ட இன்ஜினியர்களை சட்டவிரோதமாக பணியமர்த்தியது ஆய்வில் கண்டறியப்பட்டதை அடுத்து தைவான் நீதிமன்றம் கைதுஉத்தரவு பிறப்பித்துள்ளது.
